கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில், சில தளர்வுகளை மாநில அரசுகளே அறிவிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள 4-வது கட்ட ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் வழங்குவது குறித்து, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post