கொரோனாவை தடுப்பதற்காக, 4ஆம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில், சில தளர்வுகளை மாநில அரசுகளே அறிவிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், டெல்லியில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள 4-வது கட்ட ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் வழங்குவது குறித்து, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Discussion about this post