திருநங்கைகள் பாதுகாப்பு மசோதாவிற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
திருநங்கைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும், அவர்களின் உரிமையை நிலைநாட்டும் வகையிலும் திருநங்கைகள் பாதுகாப்பு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி திருநங்கைகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்டவைகளில் பாகுபாடு காட்டுதல் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் என மசோதாவில் கூறப்பட்டுள்ளது. திருநங்கைகளுக்கு சமூக, பொருளாதார மற்றும் கல்வி அதிகாரங்கள் அளிக்க வழிவகை செய்யும் வகையிலும் அவர்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையிலும் தயார் செய்யப்பட்டுள்ள இந்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post