2019-20 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல்

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே, மத்திய நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த மே மாதம் 30 ஆம் தேதி பதவியேற்றது. இதையடுத்து புதிய அரசினுடைய முதல் நிதிநிலை அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் சார்பில், காலை 11 மணிக்கு 2019-20 ஆம் ஆண்டிற்கான முழுமையான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்கிறார்.

முன்னதாக 2018 -19 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது . மேலும், மத்திய, மாநில அரசுகளின் மொத்த நிதி பற்றாக்குறை 5.8 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. தாக்கலாகும் இந்த நிதி நிலை அறிக்கையில், கிராமப்புற வளர்ச்சி மற்றும் சிறு, குறு தொழில்துறை நிறுவனங்களின் வளர்ச்சிக்கான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version