தடைசெய்யப்பட்ட பொருட்களை ரயில் நிலையத்துக்குள் எடுத்து செல்வது போன்ற குற்றச் செயல்களை தடுப்பதற்கு, திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில், சீருடையில் கண்காணிப்பு கேமரா பொருத்தியபடி இரயில்வே காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட துவங்கியுள்ளனர். திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் ஜங்ஷன் ரயில் நிலையம் எந்நேரமும் பயணிகளின் கூட்டத்தால் பரபரப்புடன் இருக்கும்.
இந்த நிலையில், ரயில் பயணிகளிடம், பிஸ்கட் போன்ற உணவு பொருட்களில் மயக்க மருந்து கலந்து கொடுத்து உடைமைகளை திருடி செல்லும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதேபோல் தடை செய்யப்பட்ட பொருட்களை ரயில் நிலையத்துக்குள் எடுத்து செல்வது போன்ற குற்றச்செயல்களிலும் சிலர் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில் இவைகளை கட்டுப்படுத்தும் வகையில் ரயில்வே பாதுகாப்பு படை காவலர்களின் சீருடையில் கண்காணிப்பு கேமரா பொருத்திக் கொண்டு ரோந்து செல்லும் திட்டம் தெற்கு ரயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை , திருச்சி, நெல்லை, சேலம், கோவை ஆகிய ரயில் நிலையங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post