சிவகங்கை மாவட்டம் கீழடியில் கிடைத்த அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்த அருங்காட்சியகம் அமைப்படும் எனக் கூறிய முதலமைச்சருக்கு, தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை சார்பாக நன்றியைத் தெரிவிப்பதாக இயக்குனர் பாரதி ராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் கீழடியில் கிடைத்திருப்பது ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இத்தகைய சிறப்பு மிக்க சான்றினை சிலர், திராவிட நாகரீகம் என்றும், சிலர் இந்து நாகரீகம் என்றும் திரிக்க முயல்கின்றனர் என்றும், பொய்க்கு மேல் பொய் கூறி ஒரு மாயையை நிஜமக்க முயல்வதாகவும் இயக்குனர் பாரதிராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
கீழடியில் ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை ஏற்று, அதற்காக 12 கோடியே 21 லட்ச ரூபாய் செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்ததற்கு, தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பாக பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவிப்பதாக இயக்குனர் பாராதிராஜா தெரிவித்துள்ளார்.
Discussion about this post