தென் தமிழகத்தில் முதன்முறையாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அதிநவீன செயற்கை கால்கள் வழங்கப்பட்டுள்ளன.
முன்பு வழங்கப்பட்ட செயற்கைகால்களை விட எடை குறைவாக இருப்பதால் நீண்ட நேரம் அணியவும் மேடு பள்ளங்களில் எளிதாக நடக்கவும் முடியும். மதுரை ராஜாஜி மருத்துவமனையின் முடநீக்கியல் துறை சார்பில் முதல்கட்டமாக 4 பேருக்கு இந்த செயற்கை கால்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதிநவீன செயற்கைக்கால்களால் தாங்கள் மீண்டும் பழையநிலைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கும் பயனாளிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
Discussion about this post