வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே செயல்பட்டு வந்த போலி மதுபான ஆலையை கண்டுபிடித்து, இதுதொடர்பாக 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டறம்பள்ளி அருகே ஏரியூரில் மனோகரன், கோவிந்தராஜ் மற்றும் சரவணன் ஆகியோர் சட்டவிரோதமாக போலி மதுபான ஆலையை நடத்தி போலி மதுபானங்களை கடத்தி வந்தது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிந்தது. இதையடுத்து மதுபானங்கள் கடத்தப்பட்ட காரை மடக்கி பிடித்த போலீசார் மனோகரன் உள்ளிட்ட மூவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் இருந்து 720 போலி மதுபாட்டில்கள் மற்றும் மதுபானம் தயாரிக்கும் இயந்திரம், கார் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இந்த போலி மதுபானங்களை திருப்பத்தூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் தாபா ஓட்டல்களுக்கு சப்ளை செய்து வந்தது தெரியவந்துள்ளது.