சென்னை திருவல்லிக்கேணி அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் 150 மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன. திருவல்லிக்கேணி தைபூன் அலிகான் தெருவில் நின்ற ஆம்னி வேனை தேர்தல் அலுவலர் திருநாவுக்கரசு தலைமையில் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணமில்லாததால் வாகனத்திலிருந்த 150 மடிக்கணினிகளையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post