ஐ.நா. சபையின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நியூயார்க் சென்றடைந்தார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 7 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இரவு நியூயார்க் சென்றடைந்தார். ஐ.நா. சபையில் நாளை மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். வரும் 27 ஆம் தேதி ஐ.நா. சபையின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர், புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம், பயங்கரவாத ஒழிப்பு உள்ளிட்டவை குறித்து பேசவுள்ளார்.
Discussion about this post