கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இந்தியா சரியான பாதையில் செல்வதாக ஐ.நா. பொருளாதார சமூக கமிஷன் பாராட்டு தெரித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலகின் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பல அவசரகால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்தியாவிலும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரசிற்கான எதிர்ப்பு மற்றும் தடுப்பு கால நடவடிக்கையில் இந்தியா சரியான திசையில் செல்கிறது என்று ஆசியா, பசிபிக் நாடுகளுக்கான ஐ.நா. பொருளாதார, சமூக கமிஷன் பாராட்டு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், பொருளாதார கொள்கைகளை வகுக்கும் போது சமூக உள்ளடக்கம் மற்றும் சுற்றுசூழல் நிலைத்தன்மை ஆகியவற்றுடன் மக்களின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.
Discussion about this post