பொதுமக்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தவித்த உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க நடத்திய கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் உதயநிதி ஸ்டாலின் திணறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டு பகுதியில் நடந்த கூட்டத்தில் பொதுமக்கள் சரமாரி கேள்விகளை எழுப்பினர். தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஐ. பெரியசாமி தங்கள் ஊருக்கு எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர். தனக்கு அரசு கொடுத்த நிலத்தை தி.மு.க பொறுப்பாளர்கள் அபகரித்துக் கொண்டதாக பெண் ஒருவர் குற்றம் சாட்டினார்.

இதை சற்றும் எதிர்பாராத திமுகவினர் தங்களுக்கு வேண்டியவர்ளை மட்டுமே பேசுவதற்கு அனுமதித்தனர். இதனால் கோபமடைந்த மக்கள் உதயநிதி உள்ளிட்டோரை நோக்கி சரமாரியாக கேள்வி எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.

Exit mobile version