நீலகிரியில் கனமழை காரணமாககடந்த 9 நாட்களாக ரத்து செய்யப்பட்ட உதகை – மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. குன்னூர், கோத்தகிரி, குந்தா போன்ற பகுதிகளில் அதிகளவில் மழை பெய்ததால் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையிலான மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் பயணிகளின் பாதுகாப்பு கருதி மலை ரயில் சேவை 25ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்தது. மழைப் பொழிவு குறைந்து ரயில் பாதை சீரமைக்கப்பட்டதை அடுத்து உதகை – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
Discussion about this post