தமிழக – கேரள எல்லை பகுதியான களியக்காவிளை பேருந்து நிலையத்தில் கஞ்சா உடன் இருவர் சுற்றி வருவதாக களியக்காவிளை காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேகத்திற்கு இடமாக சுற்றிவந்த செல்லம் மற்றும் ரவிகுமார் ஆகியோரிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யபட்டது. இதனை தொடர்ந்து இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post