அருப்புக்கோட்டை அருகே பழிக்குப்பழியாக வாலிபர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் இரண்டுபேர் கைது செய்யப்பட்டனர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மூர்த்தி மற்றும் அக்னி ராமன் ஆகிய இரு குடும்பத்திற்கும் இடையே நீண்ட காலமாக நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அக்னி ராமனால் கடந்த 2016 புத்தாண்டு அன்று கந்தவேலு வெட்டி கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் அக்னி ராமன் சிறை சென்று விட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இந்நிலையில் மாந்தோப்பு பகுதியில் தனது சித்தப்பாவின் சமாதிக்கு சென்று விட்டு திரும்பிய அக்னி ராமனை, மூர்த்தியின் கும்பல் வழிமறித்து பழிக்குப் பழியாக சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இதில் மூர்த்திக்கு உதவி செய்த அருண்குமார் ஜெயராமமூர்த்தி ஆகிய இருவரை மல்லாங்கிணறு காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய மூர்த்தி, முத்துக் கண்ணன், தவமணி, ராசாத்தி ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Discussion about this post