சென்னை அடுத்த திருவேற்காட்டில், வாய் தகராறில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஏசுகுமாரை, உடன் பணிபுரிந்த சிலம்பரசன், ரகு ஆனந்தன் ஆகியோர் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு சிலம்பரசனும், ரகு ஆனந்தனும் இணைந்து ஏசுகுமாரை ஓட ஓட அடித்துக் கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட இருவருக்கும், ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து பூந்தமல்லி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அபராதம் கட்ட தவறினால் மேலும் 8 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
Discussion about this post