காஞ்சிபுரம் அருகே லாரி மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம் அடுத்துள்ள வெள்ள கேட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உணவருந்துவதற்காக லாரி ஓட்டுநர் திடீரென வாகனத்தை ஓரம் கட்டியுள்ளார். அப்போது வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று லாரியின் பின்னால் மோதியது. இதில், சுந்தர்ராஜ் என்பவரும், அவருடன் வந்த மற்றோரு நபரும் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
உணவருந்த வரும் கனரக வாகனங்கள் பின்னால் வரும் வாகனத்தை கவனிக்காமல் திடீரென வாகனத்தை ஓரம் கட்டுவதால், விபத்து ஏற்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Discussion about this post