கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திகானுர் கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அத்திகானூர் கிராமத்தில் பொங்கலை முன்னிட்டு எருது விடும் விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் எருது விடும் விழாவிற்கு கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் மாவட்டங்ளை சேர்ந்த 250 காளைகள் பங்கேற்றன. இவற்றை காண சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
Discussion about this post