கேராளவில் பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண் உட்பட இருவரிடம் கேரள காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கை வழியாக தமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் நுழைந்துள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து தமிழகம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கூடும் பகுதிகளிலும், முக்கிய இடங்களிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே சந்தேகத்தின் பேரில் கேரளாவைச் சேர்ந்தவரும் கோவையில் தங்கியிருந்தவருமான அப்துல் காதர் ரஹீம் என்பவரை கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவருடன் தங்கியிருந்த பெண் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பிருப்பதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கோவை சேர்ந்த 3 பேரைக் காவல்துறையினர் விடுவித்துள்ளனர்.
Discussion about this post