ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உரிமம் இன்றி நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அந்தியூரை அடுத்த நஞ்சமடைக் குட்டையைச் சேர்ந்த தாமஸ் என்பவரும் பெருமாபாளையத்தை சேர்ந்த டேவிட் என்பவரும் நாட்டுத் துப்பாக்கிகளை வைத்து வனவிலங்களை வேட்டையாடி வருவதாக தனிப்பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து இருவரது வீட்டிலும் சோதனை நடத்திய அதிகாரிகள், பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்தனர். மேலும் இருவரையும் கைது செய்து பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற விசாரணைக்கு பிறகு இருவரும் சிறையிலடைக்கப்பட்டனர்
Discussion about this post