கோவையில் நாட்டு துப்பாக்கி மூலம் வனப்பகுதியில் மான் மற்றும் முயல்களை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக துப்பாக்கி சத்தம் கேட்பதாக அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதனையடுத்து வனச்சரகர் சுரேஷ் தலைமையிலான தனிப்படையினர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மலை அடிவாரப்பகுதியான பாரதிநகரில் துப்பாக்கி சத்தம் கேட்டதால் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது நாட்டுதுப்பாக்கி மற்றும் வெடிபொருட்களுடன் இருந்த இருவர் பிடிபட்டனர். அவர்களை கைது செய்த வனத்துறையினர் அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்ததுடன், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post