“இது கலவர பூமி தம்பி”ன்னு வடிவேலு பாணியில் சொல்ற மாதிரி கலவரத்துக்கு பஞ்சமே இல்லாம இந்த உலகம் போய்கிட்டு இருக்கு. இதுல கொஞ்சம் வித்தியாசமானது சமூக வலைத்தளங்களில் நடக்கும் கலவரங்கள். இதுக்குள்ள நுழைந்தாலே அரசியல், சினிமா போர்களை கடந்து நாம் அதிகம் பார்த்திருப்பது 90’s கிட்ஸ் vs 20’s கிட்ஸ் இடையேயான பாகுபலி போரைத் தான். இது நமக்குள்ள இருக்கற தன்மானத்தை தட்டி எழுப்பி சண்டைப் போட வச்சாலும் பழைய நினைவுகளை மீட்டு கொண்டு வர்றதால இதுக்கு எப்பவுமே தனி பவர் உண்டு.
நேற்றைய தினம் 90’s கிட்ஸ்-க்கான தினம். டிவிட்டர் பக்கத்துல #90sKidsRumors என்கிற Hashtag வேகமாக ட்ரெண்ட் ஆக ஆரம்பித்தது. பொதுவாக 90களில் பிறந்தவர்கள் தங்கள் எத்தகைய வெகுளித்தனமாக இருந்தோம் என்பதையும், அந்த காலத்தில் ஆரம்பித்து தற்போது வரை அவர்கள் நம்பிக் கொண்டுள்ள மூடநம்பிக்கைகள் பற்றியும் தெரிந்துக் கொள்ள ஏதுவாக இருந்தது.
90’s கிட்ஸ் போட்ட ட்வீட்களை பார்க்கும் போது சமூக பழக்க வழக்கங்கள் பற்றி எத்தகைய தெளிவில்லாத ஒரு காலத்தில் இருந்துள்ளோம் என்பதும், இப்போது எந்த அளவு முன்னேறியுள்ளோம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
90’s கிட்ஸ் வதந்திகளை பார்க்கும்போது காமெடியாகத்தான் தோன்றும். அரசியல்,கல்வி, சினிமா, விளையாட்டு, இயற்கை என எதையும் விட்டு வைக்காமல் இந்த வதந்திகள் வலம் வந்திருக்கின்றன.
அதில் சில இங்கே ட்வீட்கள் இங்கே:
# இந்த உலகத்தில ஒரே மாதிரி ஏழுபேர் இருப்பாங்க…
#2000 ல உலகம் அழிஞ்சிடும் (பின் இது 2012 ஆக மாறியது வேற லெவல் வதந்தி)
#வீட்டு வாசல்ல காக்கா கத்துனா சொந்தக்காரங்க வருவாங்க ??
#ஊற வெச்ச அரிசிய எடுத்து சாப்பிட்டா கல்யாணத்தன்னைக்கு மழை பெய்யும்.. அப்புறம் யாரும் கல்யாணத்துக்கு வர மாட்டாங்க..
#பென்சில சீவி வெந்நீரில் போட்டால் ரப்பர் வரும்னு experiment பன்னுனதெல்லாம் ஒரு காலம்!!
#மரத்துல ஆணி அடிச்சிருந்த அந்த மரத்துல பேய் இருக்குனு அர்த்தம் ???
# All the people played cricket, Legends played book cricket ?
#Every kid wanted a Shakalaka boom boom pencil to draw wonder
#Ricky Ponting Played With A Spring Bat in WC2003 Final against India ?
# நம்ம தோள் மேலே அடுத்தவன் கை போட்டா அப்புறம் வளர மாட்டோம்.!
#Undertaker நேத்திக்குசெத்துபோயிட்டான் ! அவனுக்கு மொத்தம் 7 உயிர் இருக்கு….
#மின்னல பாத்தா கண்ணு போயிரும்டா, இது பரவால்ல இடி இடிக்கிறப்ப அர்ஜூனா அர்ஜூனா ன்னு சொல்லிட்டே இருந்தா இடி நம்ம தலைல விழாது.!
#MGR சமாதிலWatch சத்தம் கேட்குது!
#பொய் சொன்னா சாமி கண்ண குத்திடும் !
#இரண்டு சுழி இருந்தா இரண்டு பொண்டாட்டி….
#கிரிக்கெட் வீரர் சித்து ஸ்டெம்ப புடுங்கி அம்பயர குத்தி கொன்னுட்டான்… சிக்சர் சிக்சர்னு கத்துனா அந்த ஆளுக இருக்க பக்கம் சிக்சடிப்பான்…
#மாடி மேல இருந்து குதிச்சா சக்திமான் காப்பாத்துவாரு
இப்படி பல வதந்திகள் இந்தியாவின் 90’s கிட்ஸ் அனைவராலும் மொழி வித்தியாசமில்லாமல் பதிவிடப்பட்டது. பலபேர் போட்டோ ஆதாரத்துடன் தங்கள் வதந்திகளுக்கு சான்றளித்தனர். நீங்களும் #90sKidsRumorsல் சின்ன வயதில் நம்பிய வதந்திகளை ஒருதடவை சொல்லிப் பாத்துக்கோங்க பார்க்கலாம்.
Discussion about this post