உலக அளவில் தொழில் நுட்ப கோளாறால் சமூக வலைதளமான ட்விட்டர் தளம் செயலிழந்தது.
காலையில் இருந்து ட்விட்டர் இணைய தளம் தொழில் நுட்ப கோளாறால் செயல் இழந்தது. ட்வீட் பயனர்களின் உள்நுழையும் முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன. இந்நிலையில், சமூக ஊடக வலைதளமான ட்விட்டர், தொழில் நுட்ப செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் கூறி உள்ளது. இதனால் கோடிக்கணக்கான உலகளாவிய பயனர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஜப்பான், கனடா மற்றும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து இது தொடர்பாக 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் வந்து உள்ளன.
Discussion about this post