சமூக வலைதளங்களில் பிரபலங்கள் அதிகம் பயன்படுத்துவது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்தை தான்.அதிலும் ட்விட்டரில் எதிர்பாராத விதமாக பல ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டாகும்.சில நாட்களுக்கு முன்பு நேசமணி ஹேஸ்டேக் உலகளவில் ட்ரெண்டானது.
சினிமாவை பொறுத்தவரை அஜித்-விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் மோதிக்கொண்டு ஹேஸ்டேக்குகளை ட்ரெண்ட் செய்வதை அடித்துக்கொள்ள முடியாது.ஆனால் அஜித்-விஜய் இருவருமே ட்விட்டர் தளத்தில் இல்லை.விஜயின் அலுவலகத்திலிருந்து மட்டும் ஒரு ட்விட்டர் கணக்கு இயங்கி வருகிறது.அதில் படம் சார்ந்த போஸ்டர், ட்ரைலர்கள் மட்டும் பகிரப்பட்டு வருகிறது.ஆனால் அஜித் தரப்பில் எந்த ஒரு ட்விட்டர் கணக்கும் இல்லை.ஆனால் அவர் இல்லாத குறையை அவரின் ரசிகர்கள் தீர்த்துவிடுகின்றனர்.
இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ட்விட்டர் தளத்தின் பங்கு, ஹேஷ்டேக்குகள் உள்ளிட்டவைத் தொடர்பாக ட்விட்டர் இந்தியாவின் பார்ட்னர்ஷிப் மேனேஜர் செரில் ஆன் கூட்டோ, ’தி இந்து’ ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியொன்றை அளித்துள்ளார்.
அதில் தல ஹேஸ்டேக் எப்போதும் ட்ரெண்டிங்கில் உள்ளது.அதனால் ட்விட்டர் இந்தியா எப்பொழுதாவது அவரை தொடர்புகொண்டது உண்டா ? என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.அதற்கு ‘அஜித் ட்விட்டருக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவரது படங்களையும், ரசிகர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதையும் எந்த அளவுக்கு விரும்புகிறார்கள் ’என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
Discussion about this post