டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனசை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ், 11.67 சதவீதம் கருணைத் தொகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போனஸ் மற்றும் கருணைத் தொகை, டாஸ்மாக் ஊழியர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. டாஸ்மாக் பணியாளர்களுக்கு 5 வகையாக போனஸ் தொகை வழங்கப்படுகிறது.
Discussion about this post