திருமண மண்டபங்களைத் தற்காலிக மருத்துவ மனைகளாக மாற்றுவதற்குத் தமிழக அரசு முடிவெடுத்தால், முதல் மண்டபமாக எங்கள் ‘பொன்மணி மாளிகை’ திருமண மண்டபத்தை மருத்துவமனையாக மாற்ற வழங்குகிறோம். மணம் நிகழ்வதைவிட குணம் நிகழ்வதே மங்கலமல்லவா? என்று கவிஞர் வைரமுத்து இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இவ்வளவு நாள் கொரோனா தொற்று தெரியவில்லையா? எங்கே போனீர்கள் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக இப்போதுதான் கொரோனா தொற்று பரவுவது போல உதவ முன்வருவது நடுநிலையாளர்கள் பலரையும் முகம்சுழிக்க வைத்துள்ளது.
மேலும், “உங்களுக்கு மண்டபம் பல தொழில்களில் ஒன்று. திருமண நிகழ்வை நம்பி வாழ்கை நடத்தும் 25 லட்சம் அமைப்பு சாரா உழியர்கள் வாழ்வாதாரம் பற்றி உங்களுக்கு அக்கறை இருக்க வேண்டும் உங்களின் தன்னார்வம் மற்றவரின் வாழ்வை கெடுக்க கூடாது” என்றும் ட்விட்டரில் பதில் தெரிவித்து வருகின்றனர்.