கொரோனா வைரஸ் குறித்து ஒரு தொலைக்காட்சித் தொடர் 2 ஆண்டுகளுக்கு முன்பே கணித்து உள்ளது இணைய உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்ன சொன்னது அந்தத் தொடர்?
புதிய கொரோனா வைரஸ் உருவாகும் என எதிர்பார்க்கவில்லை – என்று சீனாவும், கொரோனா இவ்வளவு பெரிய பிரச்னையாக உருவாகும் என முதலில் தெரியவில்லை – என உலக சுகாதார நிறுவனமும், கொரோனா இவ்வளவு உயிரிழப்புகளை உருவாக்கும் எனத் தெரியவில்லை – என்று இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளும் கூறிவரும் நிலையில் ஒரு தொலைக்காட்சித் தொடர் 2 ஆண்டுகள் முன்பே கொரோனா வைரஸ் குறித்து விரிவாக விளக்கி உள்ளது என்பது நம்புவதற்கே கடினமான ஒரு உண்மை! தென் கொரிய தொலைக்காட்சித் தொடரான ‘மை சீக்ரெட் டெர்ரியஸ் (my secret terius)’ கடந்த 2018ஆவது ஆண்டில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலும் ஒளிபரப்பாகி பலத்த வரவேற்பைப் பெற்ற ஒன்று. இந்தத் தொடரின் ஒரு அத்தியாயத்தில் ஆயுதமாகப் பயன்படும் ஒரு வைரஸ் குறித்து 2 கதாப் பாத்திரங்கள் பேசுவதாகக் காட்சி வருகின்றது. அந்தக் காட்சியில் வரும் மருத்துவர், இது கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாற்றம் பெற்ற வைரஸ் போலத் தோன்றுகின்றது. சார்ஸ், மெர்ஸ், இவை கூட கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவைதான், கொரோனா வைரஸ் சுவாச மண்டலத்தைத் தாக்கக்கூடியது – என்று கூறுகிறார்.
அப்போது அவருடன் உரையாடும் மற்றொரு கதாப்பாத்திரம், ‘ஆனால் இது ஆயுதமாகப் பயன்படுத்தும் அளவுக்கு மோசமானது இல்லை அல்லவா?’ – என்று கேட்க, அதற்கு அந்த மருத்துவர், ’கொரோனா தொற்றை 14 நாட்களுக்குப் பின்னர்தான் கண்டுபிடிக்கவேமுடியும். மற்றொரு நபரிடம் 5 நிமிடங்கள் பேசினால்கூட இந்த வைரஸ் பரவி விடும்’ – என்று சொல்கிறார். அப்போது இரண்டாவது கதாப்பாத்திரம், ‘இதற்கு ஏதாவது மருந்து உள்ளதா?’ – என்று கேட்க, அந்த மருத்துவர், ‘இப்போதைக்கு இதற்கு மருந்தோ, தடுப்பு மருந்தோ இல்லை’ – என்கிறார். இந்தத் தொலைகாட்சித் தொடரில் கூறப்பட்டு உள்ளது அப்படியே நடந்து வருவதைப் பார்த்து கொரிய மக்களும் இங்கிலாந்து மக்களும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். கடந்த 2018 செப்டம்பர், நவம்பரில் தென் கொரியாவில் ஒளிபரப்பான இந்தத் தொடரை தற்போது பலரும் தேடித் தேடிப் பார்த்தும் வருகின்றனர். ஏற்கனவே 2 புத்தகங்களில் கொரோனா வைரஸ் சரியாகக் கணிக்கப்பட்டு இருந்த நிலையில், ஒரு தொலைக்காட்சித் தொடரும் வைரஸ்சை சரியாகக் கணித்து உள்ளது மக்களுக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post