உக்ரைன் நாட்டின் அதிபராக அரசியல் நகைச்சுவை டிவி சீரியலில் அதிபராக நடித்தவர் தற்போது நிஜத்திலும் அதிபராக தேர்வாகி அசத்தியுள்ளார்.கிழக்கு ஐரோப்பா ரஷியாவை ஒட்டியுள்ளது உக்ரைன்.அந்நாட்டின் அதிபர் தேர்தல் மார்ச் 29 மற்றும் ஏப்ரல் 21 என இரு கட்டங்களாக நடைப்பெற்றது.அதில் நகைச்சுவை நடிகரான Volodymyr Zelensky அத்தேர்லில் போட்டியிட்டார்.அவருடன் 39 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக தேர்தலில் Zelensky வெற்றிப்பெற்றுள்ளார்.
உக்ரைன் நாட்டில்‘servant of the people’என்ற டிவி சீரியலில் இவர் உக்ரைன் நாட்டின் அதிபராக மாறிவிடுவாராம்.தற்போது நிஜத்திலும் அதிபராகி உள்ளார்.அதோடு டிவி சீரியலின் பெயரான ‘servant of the people’என்பதையே தனது கட்சியின் பெயராகவும் வைத்துள்ளார்.
மேலும், இவர் சாதாரண வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெறவில்லை.தேர்தலில் 73 சதவீத வாக்குகளை பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
Discussion about this post