இன்று மத்திய நிதிநிலை அறிக்கையினை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருந்த நிலையில், அதில் டிவி மற்றும் செல்போன்களின் விலை குறைய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. காரணம் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் உதிரி பாகங்களுக்கான சுங்கவரி 21 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாக குறைக்கப்படுகிறது. அதேபோல மின்சார வாகன பயன்பாட்டினை அதிகரிப்பதற்காக அதன் பேட்டரிகளுக்கான வரி 21 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் முதியவர்களுக்கான அஞ்சலக வைப்புநிதியின் வரம்பு 15 லட்சத்திலிருந்து ரூபாய் 30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை அளவு ரூ 4.5 லட்சத்திலி இருந்து ரூபாய் 9 லட்சமாக உயர்வு. மேலும் 7.5% வட்டியில் பெண்களுக்கு புதிய சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.
Discussion about this post