திருச்செங்கோடு கூட்டுறவு வேளாண் சங்கத்தில் ஆயிரத்து 500 மூடை மஞ்சள், 70 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் மஞ்சள் விற்பனை நடைபெறுவருவது வழக்கம். கள்ளக்குறிச்சி, பொம்மிடி, ஆத்தூர், கெங்கவல்லி, கூகையூர், அரூர், ஜேடார்பாளையம், பரமத்திவேலூர், பூலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மஞ்சள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த மஞ்சளை கொள்முதல் செய்வதற்காக ஈரோடு, ராசிபுரம், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வருகை தந்தனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தின் மூலம் ஆயிரத்து 500 மூடை மஞ்சள் 70 லட்சம் ரூபாயிக்கு விற்பனையானது. விரலி ரகம் குவிண்டாலுக்கு 7 ஆயிரத்து 259 ரூபாய் முதல் 9 ஆயிரத்து 399 ரூபாயிக்கும், பனங்காளி ரகம் 11 ஆயிரத்து 422 முதல் 15 ஆயிரத்து 919 ரூபாய்க்கு விற்பனையானது.
Discussion about this post