துருக்கியில் கடந்த வாரம் திங்கட்கிழமை பிப்ரவரி 5ஆம் தேதி இரண்டு முறை பூகம்பம் ஏற்பட்டது. 7.8 மற்றும் 7.4 ஆகிய ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அதற்கு அடுத்தநாளான செவ்வாய் கிழமை 5.5 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. இதனால் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பெரிய பெரிய கட்டிடங்கள் சரிந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை தொடர்ந்து மீட்ட வண்ணம் உள்ளனர் மீட்பு பணியினர். மேலும் பனி, பசி போன்றவற்றினாலும் தொடர்ந்து மக்கள் இறந்து வருகிறார்கள். தற்போதைய நிலவரப்படி துருக்கியில் மொத்தம் இறப்பு எண்ணிக்கை 40,000 என்று கூறப்படுகிறது.
Discussion about this post