ஜம்மு-காஷ்மீரில், ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர் பூந்தோட்டம் பூத்துக் குலுங்குவதால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரில், ஆசியாவின் மிகப்பெரிய துலிப் வகை பூக்களின் தோட்டமாக, இந்திரா காந்தி நினைவு துலிப் பூந்தோட்டம் உள்ளது. இங்கு தற்போது பூக்கள் முழுமையாக பூத்துக் குலுங்குவதால், அதனைக் காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். கோடை விடுமுறையை முன்னிட்டு ஏராளமானோர் தங்கள் குடும்பத்துடன் வந்து, அங்க பூத்திருக்கும் துலிப் மலர்களை ஆர்வத்துடன் கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.
Discussion about this post