திருவள்ளூர் அருகே நகரின் மையப்பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் லாக்கரை உடைக்க முடியாததால் நகை, பணம் உள்ளிட்ட பொருட்கள் தப்பின.
திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில் தனியார் நிதிநிறுவனத்தைத் திறக்கும்போது, அந்நிறுவனத்தின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தனியார் நிறுவனத்தினர், காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவு முகமூடி அணிந்து வந்த மர்ம ஆசாமி, லாக்கரை உடைக்க 2 மணிநேரம் போராடி பார்த்துவிட்டு, முடியாததால் வெளியேறினார். இதனால் அலுவலகத்தில் வைத்திருந்த 5 சவரன் நகைகள், 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்கள் தப்பியது. நகரின் மையப் பகுதியில் நடைபெற்ற இந்த கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post