டிரம்ப்பின் ரசிகர் அவரை சந்திக்க அனுமதி தருமாறு வேண்டுகோள்

இந்திய சுற்றுப்பயணத்தின் போது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு ட்ரம்ப்பின் ரசிகர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஜங்கோன் பகுதியை சேர்ந்தவர் புஷ்சா கிருஷ்ணா. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் தீவிர ரசிகரான இவர், கடந்த ஆண்டு தமது வீட்டில் ட்ரம்ப்புக்கென கோயில் கட்டினார். 6 அடி உயரத்தில் சிலை எழுப்பி, ட்ரம்ப்பை கடவுளாக வழிபட்டு வருகிறார் கிருஷ்ணா. இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான நல்லுறவு மேம்பட விரும்புவதாக தெரிவித்த அவர், ட்ரம்ப் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்காக வெள்ளிக்கிழமை தோறும் விரதம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ட்ரம்ப்பை கடவுளாக தாம் வழிபடுவதற்கு, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் கிருஷ்ணா கூறினார்.

Exit mobile version