அமெரிக்க பொருளாதாரம் மீளவில்லையெனில், வரப்போகும் அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் படுதோல்வி அடைவார் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் ஏராளமான தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு வேலையில்லா திண்டாட்டம் தலைதூக்கியுள்ளதால் மக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். அமெரிக்காவின் பொருளாதார சரிவு, நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதாரத்தை மீட்க துரித நடவடிக்கை எடுக்காவிட்டால், அதிபர் டிரம்ப் வரப்போகும் தேர்தலில் பெரும் தோல்வியை சந்திக்க நேரிடும் என கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், டொனால்டு டிரம்ப் 35 சதவீத வாக்குகள் மட்டுமே பெறுவார் எனவும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 65 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
Discussion about this post