அமெரிக்காவில் பெண் எம்.பியை நிறவெறி நோக்கத்தோடு விமர்சித்த அதிபர் டிரம்ப் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நடாளுமன்ற பெண் உறுப்பினர்களை பூர்வீக நாட்டுக்கு திரும்பி செல்லுமாறு கூறி சமீபத்தில் சர்ச்சையில் சிக்கினார். இதைத் தொடர்ந்து, ஜனநாயக கட்சியினர் டிரம்புக்கு எதிராக கண்டனங்கள் தெரிவித்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது பால்டிமர் நகரத்தை விமர்சித்துள்ள அதிபர் டிரம்ப், மனிதர்கள் வசிக்க முடியாத நகரம் என்றும் அமெரிக்காவிலே அருவருப்பான நகரம் என்றும் விமர்சித்துள்ளார்.
இதனை, பால்டிமர் நகரம் அமைந்துள்ள மேரிலாண்ட் மாகாணத்தின் எம்.பியான கருப்பினத்தைச் சேர்ந்த எலிஜா கம்மின்ஸை குறிப்பிட்டு கூறி மீண்டும் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். டிரம்பின் இந்த கருத்துக்கு விமர்சனம் எழுந்துள்ள நிலையில், கருப்பினத்தவர்களின் எதிர்ப்பு வலுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post