அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல் தனி இரு நாடுகள் இடையேயான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல் தனி அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். வெள்ளை மாளிகையில் அவரை வரவேற்ற அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்த நடத்தினார். அப்போது, கத்தார் மன்னர் மிகவும் மரியாதைக்குரியவர் என்றும், அமெரிக்காவில் முதலீடு செய்வதன் மூலம் இரு நாடுகளுடனான உறவு மேலும் வலுப்படும் என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
தொடர்ந்து ராணுவ போயிங் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல் தனி கையெழுத்திட்டார். அதைத் தொடர்ந்து இரு நாடுகளுடனான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.