எச்1-பி உள்ளிட்ட சில விசாக்களை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தலின் போது, அமெரிக்க பொருட்களையே வாங்குவோம், அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பு என ட்ரம்ப் பிரச்சாரம் செய்தார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின், எச் 1-பி விசாக்களுக்கான சட்டத்தில் ட்ரம்ப் திருத்தம் கொண்டு வந்தார். வரும் நவம்பர் மாதத்தில், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், எச் 1-பி உள்ளிட்ட சில விசாக்களை நிறுத்த அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். எச் 1-பி விசாக்களை தடைசெய்தால், அமெரிக்காவில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள். அதே போல் ஹோட்டல் மற்றும் கட்டுமானத்துறை ஊழியர்களுக்கான எச்-2பி விசா, ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கான ஜே-1 விசாவையும் ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் முனைப்பு காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Discussion about this post