ஆகஸ்ட் 13 ஆம் நாள் டிரம்ப் அரசு விலங்குகளை பாதுகாக்கும் சட்டத்தில் சில மாற்றங்களைக கொண்டு வந்திருக்கிறது. இதனால் அழிந்து வரும் அரியவகை உயிரினங்கள் மேலும் அழிவை நோக்கித் தள்ளப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
பருவநிலை மாற்றம் என்பது உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது மக்கள் மட்டுமல்ல, பிற உயிரினங்களும்தான். பல உலக நாடுகளில், அழிந்து வரும் இனங்களைப் பாதுகாப்பதற்குச் சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கிறது அதில் 1973ம் ஆண்டு முன்னாள் அதிபர் ரிசர்ட் நிசான் அமெரிக்காவில் நிறுவிய சட்டம், பல விலங்குகளை அழிவின் விளிம்பிலிருந்து பாதுகாக்கும் என்றும் உள்ளது.
இந்தநிலையில் ஆகஸ்ட் 13ம் தேதி டிரம்ப் அரசு இந்தச் சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. இந்த மாற்றத்தின் மூலம் பல அழிந்து வரும் இனங்கள் மேலும் அழிவை நோக்கித் தள்ளப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று கூறப்படுகிறது. ஏற்கனவே உள்ள சட்டத்தில் அழிந்து வரும் ஒரு உயிரினங்களை பாதுகாப்பதற்காகச் சிறப்பு நிதி ஒதுக்கப்படும். ஆனால், புதிய விதிகள் விலங்குகளின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் கவலை அளிக்கும் வகையில் உள்ளது.
மேலும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகள் இது ஏற்படுத்தும் என்று அஞ்சபடுகிறது. அது இன்று இல்லை என்றாலும் என்றாவது நிகழ வாய்ப்புள்ளது. ஆனால் இதை ஏற்க மறுக்கிறது அமெரிக்க அரசு. இந்த சட்டம் அரிய உயிரினங்கள் வசிக்கும் இடத்திலும்கூட சுரங்கம் அமைக்க அனுமதி வழங்குகிறது. எந்தச் செயல்களிலிருந்து உயிரினங்களைக் காப்பாற்ற வேண்டுமோ அந்தச் செயலுக்கு வழி வகுக்கிறது புதிய சட்டம். இது முந்தைய சட்டத்தின் சிறப்பை சீர்குலைக்கிறது. இதுவரை மனிதர்களின் நடவடிக்கையால் மட்டும் நூறு லட்சம் இனங்கள் அழிந்துள்ளன என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
டிரம்ப் அரசின் புதிய சட்டம் தொழில்மயமாக்களுக்கு சாதகமாக இருக்கும் வண்ணமே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதற்குக் கொடுக்கப்படும் விலை, பல வகை உயிரினங்களின் அழிவு. உலகத்தில் நாம் வாழும் சமநிலை வேண்டுமெனில் அனைத்து உயிரினங்களும் இருக்க வேண்டியது அவசியம்.
இந்தநிலையில், உலகரங்கில் முக்கிய நாடாகத் திகழும் அமெரிக்கா இதுபோன்ற சட்ட மாற்றங்கள் கொண்டு வந்திருப்பது பலருக்கும் ஏமாற்றத்தையும் வருங்காலம் குறித்த கவலையையும் அளித்திருக்கிறது. உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டிய இந்தச் சூழலில் இந்தப் புதிய சட்டம் என்பது வரவேற்கத்தக்கதல்ல என்பது பலரின் கருத்தாக இருக்கிறது.