அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பு இன்று நடைபெறுகிறது.
வியட்நாம் தலைநகர் ஹனோயில், சந்திப்புக்கான இரண்டாவது உச்சிமாநாடு நடக்கிறது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் யுன் ஏற்கனவே ஹனோய் வந்தடைந்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப் விமானப்படை விமானம் மூலம் இரவு வந்து சேர்ந்தார். கடந்த ஆண்டு ஜுன் மாதம் சிங்கப்பூரில் நடந்த முதல் சந்திப்பின் போது, ஆக்கப்பூர்வமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவில்லை. ஆனால், இரு நாடுகளுக்கு இடையே சற்று பதற்றம் தணிந்தது. அணு ஆயுத சோதனைகளை கைவிடும் கோரிக்கையை வடகொரியா மறுத்து வரும் நிலையில், இரண்டாவது சந்திப்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post