அமெரிக்க அதிபர் டிரம்பும் வடகொரிய அதிபர் கிம்ஜோங் உன்னும் கொரிய எல்லையில் ராணுவப் படைகள் நீக்கப்பட்ட பகுதியான பன்முன் ஜோமில் சந்தித்து பேசினர்
ஓராண்டு காலத்தில் மூன்றாவது முறையாக இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினர். சிங்கப்பூரில் முதன்முறை நடைபெற்ற சந்திப்பு ஓரளவு வெற்றியில் முடிந்தது. எனினும் வியட்நாமில் நடைபெற்ற இரண்டாவது சந்திப்பு தோல்வியில் முடிந்தது. பேச்சுவார்த்தையைப் பாதியிலேயே முடித்து விட்டு இரண்டு நாடுகளின் தலைவர்களும் கிளம்பினர். இந்நிலையில் தென்கொரியா மற்றும் வடகொரியாவைப் பிரிக்கும் எல்லையில் ராணுவம் நீக்கப்பட்ட பன்முன்ஜோம் பகுதியில் மூன்றாவது சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து வடகொரிய எல்லைக்குள் சென்ற டிரம்ப் சிறிது நேரம் கிம்ஜோங் உன்னுடன் உரையாடினார். இந்த சந்திப்பு கொரிய தீபகற்பத்தில் அமைதியை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வடகொரியாவுக்கு சென்ற முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post