அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடக்கும் “Howdy Modi” நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்ள உள்ளதை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.
மோடி, மீண்டும் பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஹூஸ்டன் நகருக்கு சென்று, அங்கு இந்திய-அமெரிக்க சமூகத்தினரிடையே உரையாற்ற உள்ளார். “Howdy Modi” என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி டெக்சாஸ் இந்திய கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 22 ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹூஸ்டன் நகரில் நடைபெறும் “Howdy Modi” நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “Howdy Modi” நிகழ்ச்சி ஒளிமயமான எதிர்காலத்தையும், கனவுகளையும் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வாக இருக்கும் என்றும், இதில் ஒரு லட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்புதல் தெரிவித்துள்ள டிரம்பிற்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
Discussion about this post