அமெரிக்காவில் தொழில் தொடங்க இந்திய தொழிலதிபர்களுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் இந்திய தொழிலதிபர்கள் பலர் பங்கேற்றனர். ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, அதானி, டாடா, மகேந்திரா போன்ற இந்திய தொழிலதிபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். தொழிலதிபர்கள் மத்தியில் உரையாற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப், தான் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு பொருட்கள், உபகரணங்கள் இறக்குமதி செய்வது 60 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கூறினார். அமெரிக்காவில் தொழில் தொடங்க வருமாறு இந்திய தொழிலதிபர்களுக்கு டிரம்ப், அப்போது அழைப்பு விடுத்தார். அமெரிக்காவில் தொழில் தொடங்குவதற்கான விதிகளை தளர்த்த முடிவு செய்துள்ளதாகவும் டிரம்ப் கூறினார். 5 ஜி தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு கொண்டுவர இருநாடுகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவிடம் இருந்து இந்தியா ஆயுதங்கள் வாங்குவது தங்களுக்கு பெருமையளிப்பதாக கூறிய டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
Discussion about this post