இந்திய சுற்றுப்பயணத்தின் போது மத சுதந்திரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்துவார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சி நடைபெறுவதை இந்தியாவும், அமெரிக்காவும் உறுதி செய்து வருவதாகவும், இந்தியாவின் மக்களாட்சிக்கு உரிய மதிப்பளிப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்திய சுற்றுப்பயணத்தின் போது மக்களாட்சி, மத சுதந்திரம் ஆகியவை தொடர்பாக பொது வெளியிலும், தனிப்பட்ட முறையிலும் ட்ரம்ப் கருத்து தெரிவிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத சிறுபான்மையினருக்கு இந்தியா உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, சர்வதேச நாடுகள் விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்து பிரதமர் மோடியுடன், டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Discussion about this post