வடகொரிய அதிபரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டில் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை, அடுத்த ஆண்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
ஆனால் கடந்த சந்திப்பின் போது வடகொரியா அளித்த பொய்யான வாக்குறுதிகளை ஏற்றதைப் போன்ற தவறு இந்த சந்திப்பின் போது நிகழாது என்றும் அவர் கூறினார். மேலும், ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் போட்டி கடும் சவாலானது என்று அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்தார்.
Discussion about this post