முத்தலாக் மசோதா மீதான விவாதம் இன்று மக்களவையில் நடைபெற உள்ளது.
இஸ்லாம் மதத்தில் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெறும் முறையை எதிர்த்து, நாடு முழுவதும் சமூக ஆர்வலர்களும், பெண்ணுரிமை அமைப்பினரும் குரல் எழுப்பிவந்ததையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான, முந்தைய ஆட்சியில், இஸ்லாம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவின்படி, முத்தலாக் கூறி விவாகரத்து பெறும் கணவர்களுக்கு, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். நீண்ட இழுபறிக்குப் பின், மக்களவையில் நிறைவேறிய இந்த மசோதா, மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது. மேலும், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக அவசர சட்டம் இயற்றப்பட்டு பலமுறை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நடைபெற உள்ள மக்களவை கூட்டத்தில், இம்மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
Discussion about this post