கோயில் இசைக்கலைஞர்களின் மாதம் ஊதியத்தை மூன்று மடங்கு உயர்த்தியது தொடர்பான சுற்றறிக்கை, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆழ்வார்கள் மற்று நாயன்மார்களால் பாடல் பெற்ற கோயில்களில் பணிபுரியும் நாதஸ்வரம், தவில் மற்றும் தாளம் போன்ற இசைக்கலைஞர்களின் மாதம் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, நாதஸ்வர பணியாளர்களின் மாதம் ஊதியம் ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து, 4 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தவில் பணியாளர்களின் மாத ஊதியம் ஆயிரம் ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாயாகவும், தாளம் பணியாளர்களின் மாத ஊதியம் 750 ரூபாயில் இருந்து 2 ஆயிரத்து 250 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
Discussion about this post