திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட 30 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மலேசியாவிலிருந்து வந்த விமானத்தில் வந்த பயணி ரியாஸ்கான் என்பவர் 448 கிராம் தங்கத்தை மின்னணு பொருட்களில் மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போன்று துபாய் விமானத்தில் வந்த ஜியாவுல் ஹக் என்ற பயணி மறைத்து எடுத்து வந்த 435 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
Discussion about this post