திருச்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 1 கோடியே, 44 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
திருச்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 7 பயனாளிகளுக்கு 74 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான பேட்டரி நாற்காலிகளை வழங்கினார்.
நரிக்குறவர் நல வாரியத்தின் மூலம் 8 குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. மேலும், முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2 பெண் குழந்தைகளுக்கு 50 ஆயிரம் ரூபாய்கான சேமிப்பு பத்திரமும், சுயவேலை வாய்ப்பு மற்றும் நில மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 16 நபர்களுக்கு சுய தொழில் தொடங்க கடன் மானியம், என மொத்தம் 62 பயனாயிகளுக்கு 1 கோடியே 44 லட்சத்து 15 ஆயிரத்து 449 ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு வழங்கினார்.
Discussion about this post