மணிப்பூரின் தாரட்லோக் ஆற்றில் தாங்குல் பழங்குடியின மக்கள் நடத்திய பாரம்பரிய மீன்பிடி திருவிழா அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது.
மணிப்பூரின் காம்ஜோங் மாவட்டத்தில் உள்ள நம்பாசி கிராமத்தில் தாங்குல் பழங்குடியினர் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்கள், இங்குள்ள தாரட்லோக் ஆற்றில் ஆண்டுதோறும் மீன்பிடி திருவிழாவை நடத்தி வருகின்றனர்.
ஆற்றங்கரையில் ஒன்றுகூடும் பழங்குடியின மக்கள், ஆண் பெண் பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து இந்த மீன்பிடி திருவிழாவில் ஈடுபட்டனர். முன்னதாக தங்களது பாரம்பரிய உடைகளை அணிந்துகொண்டு, கட்டைகள் முதலியவற்றை வைத்து ஆடல் பாடல்களுடன் மீன்பிடி திருவிழாவில் பங்கேற்றனர்.
இதையடுத்து ஆற்றில் மீன்பிடித்த பழங்குடியின மக்கள், அவற்றை அங்கேயே சமைத்து உண்டு மகிழ்ந்தனர்.
Discussion about this post